Attack Rasis: பிச்சு தூக்கி எறியும் சுக்கிரன்.. கண்ணீர் கதறல் உறுதி.. இந்த ராசிகள் அவ்வளவுதான்!
Attack Rasis: சுக்கிர பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Attack Rasis: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சுக்கிரன் ரிஷப மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 26, 2025 06:03 PMகுருபெயர்ச்சி பலன்: பண அதிர்ஷ்டம் இந்த ராசிகள் கதவை தட்டப்போகுது.. 2025-இல் மே குரு பெயர்ச்சி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
Mar 26, 2025 02:26 PMகீர்த்தி யோகம்: சனிப்பெயர்ச்சி 2025.. தலைகீழாக மாறப்போகும் ராசிகள் யார்?.. சனி குறித்து விட்டார்..!
Mar 26, 2025 11:17 AMரிஷபம், கும்பம், விருச்சிக ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. சனி உதயத்தால் நல்ல நேரம் ஆரம்பம்.. பதவி உயர்வு கிடைக்கும்!
Mar 26, 2025 06:30 AMKetu Transit 2025: அந்த ராசிகளே தான்.. கேது பெயர்ச்சி.. அசுப கிரகம் தரும் யோக பலன்களை பெறும் ராசிகள்!
Mar 26, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பணம் தேடி வரும் யோகம் உங்களுக்கா.. கவனமா இருங்க காரியம் முக்கியம்.. இன்று ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Mar 25, 2025 04:04 PMவக்ர செவ்வாய்: நேராக வருகின்ற செவ்வாய்.. இனி வாழ்க்கை நேராக மாறும் ராசிகள்.. உங்க ராசி என்ன ராசி?
சுக்கிர பகவான் கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு நுழைந்தார். கடக ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிரன் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும்.
சுக்கிர பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மன உளைச்சல் மற்றும் சிக்கல்கள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளில் முழுமையாக முடிப்பது நல்லது. இல்லையென்றால் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
உயர் அலுவலர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். நிதி நிலைமையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணம் சேமிப்பதற்கு சற்று காலதாமதம் ஆகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
எந்த ஒரு முடிவு எடுத்தாலும் ஒன்றுக்கு மூன்று முறை நீங்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கை துணையோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு ராசி
உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு சிறு சிறு வேலைகள் முடிப்பதற்கு கூட நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். கடின உழைப்பு கொடுப்பதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இருப்பினும் உங்களுக்கு மந்தமான சூழ்நிலையில் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.
வியாபாரத்தில் எந்த முன்னேற்றமும் இருக்காது. தொழிலில் அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடன் சிக்கல்களில் நீங்கள் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தினரிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் நீங்கள் தெளிவாக இருப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
