சனி விரட்டி விரட்டி கொட்டுகிறார்.. இனி இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. பண ராசிகள் நீங்கதான் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி விரட்டி விரட்டி கொட்டுகிறார்.. இனி இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. பண ராசிகள் நீங்கதான் பாருங்க!

சனி விரட்டி விரட்டி கொட்டுகிறார்.. இனி இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. பண ராசிகள் நீங்கதான் பாருங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 11, 2024 09:32 AM IST

சனிபகவான் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி அன்று ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தார். சனி பகவானின் சதய நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி விரட்டி விரட்டி கொட்டுகிறார்.. இனி இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. பண ராசிகள் நீங்கதான் பாருங்க!
சனி விரட்டி விரட்டி கொட்டுகிறார்.. இனி இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. பண ராசிகள் நீங்கதான் பாருங்க!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனிபகவான் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி அன்று ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தார். சனி பகவானின் சதய நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை வழங்கப் போகின்றது. உங்கள் ராசியில் முதல் வீட்டில் சனி பகவான் இருக்கின்ற காரணத்தினால் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும். 

வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து விதமான வெற்றிகளும் உங்களை தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.

ரிஷப ராசி

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை வழங்க உள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கக்கூடும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

மிதுன ராசி

சனிபகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். புதிய ஆர்டர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். 

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner