Money Luck: பண அறையில் விழப்போகும் ராசிகள்.. சுக்கிரன் கதவை திறந்தார்.. மகிழ்ச்சியில் விளையாடும் ராசிகள் யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: பண அறையில் விழப்போகும் ராசிகள்.. சுக்கிரன் கதவை திறந்தார்.. மகிழ்ச்சியில் விளையாடும் ராசிகள் யார்?

Money Luck: பண அறையில் விழப்போகும் ராசிகள்.. சுக்கிரன் கதவை திறந்தார்.. மகிழ்ச்சியில் விளையாடும் ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 17, 2024 10:55 AM IST

Lord Venus: சுக்கிரன் தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.

பண அறையில் விழப்போகும் ராசிகள்.. சுக்கிரன் கதவை திறந்தார்.. மகிழ்ச்சியில் விளையாடும் ராசிகள் யார்?
பண அறையில் விழப்போகும் ராசிகள்.. சுக்கிரன் கதவை திறந்தார்.. மகிழ்ச்சியில் விளையாடும் ராசிகள் யார்?

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிரன் தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. சுக்கிர பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப்போகின்றது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். 

மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள். மேலும் பிடிப்புக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். உங்கள் புத்திசாலித்தனமான சிந்தனைகள் யோகம் கிடைக்கக்கூடும். எடுக்க முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். பழைய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசியின் அதிபதியாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். சுக்கிர பகவான் உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கக்கூடும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு எப்போதும் உதவியாக இருப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9