தலைகீழாக புரட்டி அடிக்கும் செவ்வாய்.. கதவை திறந்தால் பணம் கொட்டும் ராசிகள்.. உங்களுக்கு உச்சம் உறுதி!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தலைகீழாக புரட்டி அடிக்கும் செவ்வாய்.. கதவை திறந்தால் பணம் கொட்டும் ராசிகள்.. உங்களுக்கு உச்சம் உறுதி!

தலைகீழாக புரட்டி அடிக்கும் செவ்வாய்.. கதவை திறந்தால் பணம் கொட்டும் ராசிகள்.. உங்களுக்கு உச்சம் உறுதி!

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 24, 2024 02:55 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நிதி ஆதாயத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தலைகீழாக புரட்டி அடிக்கும் செவ்வாய்.. கதவை திறந்தால் பணம் கொட்டும் ராசிகள்.. உங்களுக்கு உச்சம் உறுதி!
தலைகீழாக புரட்டி அடிக்கும் செவ்வாய்.. கதவை திறந்தால் பணம் கொட்டும் ராசிகள்.. உங்களுக்கு உச்சம் உறுதி!

செவ்வாய் பகவான் கடந்த அக்டோபர் இருபதாம் தேதி அன்று கடக ராசிக்கு சென்றார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நிதி ஆதாயத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு ராஜயோகமாக தொடங்கியுள்ளது. பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியவர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

உடன் பிறந்தவர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிக லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மிக நிலைமையில் மேம்பாடு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிக ராசி

செவ்வாய் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரும். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கி விட்டது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும். சொத்துக்களை வாங்குவதற்கான விற்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

பொருளாதார ஆதாயம் உங்களுக்கு உண்டாகும். வெளியூர் பயணங்கள் நல்ல வாய்ப்புகளை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம் ராசி

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சுபகாலமாக அமைந்துள்ளது. உங்களுக்கு கர்ம பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner