தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Get Good Yoga From Guru Bhagavan

Guru Peyarchi: குருபகவானால் கொட்டும் ராஜயோகம் இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 09, 2024 09:52 AM IST

Guru Bhagavan: குரு பகவானால் நல்ல யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் அந்த வகையில் குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவான் இவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கும்.

குரு பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட ராசிகளாக அமைந்துள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

இந்த ஆண்டு குருபகவான் உங்களுக்கு மே மாதத்திற்கு பிறகு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். பெரும்பான்மையான வேலைகள் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவிற்கு இந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி

 

குருபகவான் உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்க போகின்றார். பணவரவில் இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்னோர்களின் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். திடீரென எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்களுக்கு இந்த ஆண்டு நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். புதிய முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும் புதிய ஒப்பந்தங்கள் வெற்றியாக முடிவடையும். வியாபாரம் மற்றும் தொழிலில் பெரிய லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி ஆதாயத்தால் முழுமையான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நல்ல முன்னேற்றம் உங்களுக்கு நல்ல உயர்வை கொடுக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.