Angaraka Yoga: அங்காரக யோகம் முடிஞ்சு போச்சு.. இனிமே பண மழை கொட்ட போகும் ராசிகள்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Angaraka Yoga: அங்காரக யோகம் முடிஞ்சு போச்சு.. இனிமே பண மழை கொட்ட போகும் ராசிகள்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது

Angaraka Yoga: அங்காரக யோகம் முடிஞ்சு போச்சு.. இனிமே பண மழை கொட்ட போகும் ராசிகள்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 22, 2024 10:02 AM IST

Lord Mars: அசுப யோகமாக விளங்கக்கூடிய இந்த அங்காரக யோகம் நிறைவு பெற்றதால் அனைத்து ராசிகளுக்கும் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்ற பாதை உருவாகும். அதில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

அங்காரக யோகம் முடிஞ்சு போச்சு.. இனிமே பண மழை கொட்ட போகும் ராசிகள்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது
அங்காரக யோகம் முடிஞ்சு போச்சு.. இனிமே பண மழை கொட்ட போகும் ராசிகள்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களின் அசைவுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான். ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான அது மேஷ ராசியில் நுழைந்தார்.

மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைவதற்கு முன்பு மீன ராசியில் பயணம் செய்து வந்தார். அப்போது மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வந்தார். இருவரும் சேர்ந்து பயணம் செய்து வந்த நிலையில் செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கையால் அங்கார பிரயோகம் உருவானது. மேஷ ராசியில் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று புகுந்த பிறகு அந்த யோகம் நிறைவு பெற்றது.

சிரமங்களை ஏற்படுத்தக்கூடிய அசுப யோகமாக விளங்கக்கூடிய இந்த அங்காரக யோகம் நிறைவு பெற்றதால் அனைத்து ராசிகளுக்கும் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்ற பாதை உருவாகும். அதில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

அங்காரகன் யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் உள்ளது. இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழில் ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நிதின் நன்மைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. கூட்டு வணிக முறை உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கு வாழ்க்கை துணை உதவியாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் அங்காரக யோகம் முடிவுக்கு வந்துள்ள காரணத்தினால் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி செய்திகளுக்கும் பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கடக ராசி

அங்காரக யோகம் உங்களுக்கு முடிவுக்கு வருகின்ற காரணத்தினால் அதிக நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் கிடைக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். நீங்கள் எடுத்துக்கொண்ட காரியங்களில் இனிமேல் வெற்றி அடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9