தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Luck 2024: சேர்த்து விளையாடும் குரு.. ரிஷபத்தில் தொடங்கியது விளையாட்டு.. பணம் கொட்டும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Guru Luck 2024: சேர்த்து விளையாடும் குரு.. ரிஷபத்தில் தொடங்கியது விளையாட்டு.. பணம் கொட்டும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
May 29, 2024 11:51 AM IST

Guru Bhagavan: தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நுழைந்தார் ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். குருபகவான் ரிஷப ராசியில் நுழைந்ததால் விபரீத ராஜயோகம் உருவாக்கியது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

சேர்த்து விளையாடும் குரு.. ரிஷபத்தில் தொடங்கியது விளையாட்டு.. பணம் கொட்டும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
சேர்த்து விளையாடும் குரு.. ரிஷபத்தில் தொடங்கியது விளையாட்டு.. பணம் கொட்டும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

குரு பகவான் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார். இவருடைய ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நுழைந்தார் ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். குருபகவான் ரிஷப ராசியில் நுழைந்ததால் விபரீத ராஜயோகம் உருவாக்கியது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். குரு பகவானின் ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவும் உங்களை தேடி வரும். பண வரவில் எந்த சிக்கல்களும் இருக்காது நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு ராசி

உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு காலம் முழுவதும் சிறப்பான பலன்களாக இருக்கும். பங்குச்சந்தையில் விவகாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நல்ல பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் உங்களுக்கு இரட்டிப்பான லாபத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் விளக்குகள் அனைத்தும் வெற்றியாக முடிவடையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும். பணக்கார யோகம் உங்களை தேடி வருகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel