Venus Peyarchi: சுழற்றி அடிப்பார்.. சுக்கிரன் வந்து விட்டார்.. இந்த ராசிகள் இனி உச்சம்.. யாருக்கு யோகம்?
Lord Venus: சுக்கிர பகவானின் கன்னி ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
May 14, 2025 10:03 AMசனி பகவான் எந்த 3 ராசிகளுக்கு பணத்தை மழையாக பொழிவார் பாருங்க.. ஜாக்பாட் உங்களுக்கா பாருங்க!
May 14, 2025 09:59 AMபரணியில் பணமழை கொட்டும் சூரியன்.. அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராசிகள்.. பண யோகம் யாருக்கு?
May 14, 2025 06:30 AMகுரு பெயர்ச்சி: கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு.. பண யோகத்தில் அமரும் ராசிகள்.. அதே ராசிகள் தான்!
May 14, 2025 05:00 AM‘நல்ல செய்திகள் தேடி வரும்.. செலவில் கவனம்’ இன்று மே. 14 நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. பாருங்க!
சிம்ம ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கன்னி ராசிக்கு உள் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வரை சுக்கிர பகவான் கன்னி ராசியில் பயணம் செய்வார். சுக்கிர பகவானின் கன்னி ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசிகள் 12வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நண்பர்களின் உதவிமையாக கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்று தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
மகர ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எதிர்பார்த்துக் கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். முக்கிய முடிவுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இலக்குகள் சரியாக முடிவடையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
