தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: பணத்தை பொங்க வைக்கும் புதன்.. அதிர்ஷ்டத்தில் நுழையும் ராசிகள்.. உங்க ராசி இதில் உண்டா பாருங்கள்

Lord Mercury: பணத்தை பொங்க வைக்கும் புதன்.. அதிர்ஷ்டத்தில் நுழையும் ராசிகள்.. உங்க ராசி இதில் உண்டா பாருங்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 04, 2024 05:09 PM IST

Lord Mercury: மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைந்தார். புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது.

பணத்தை பொங்க வைக்கும் புதன்.. அதிர்ஷ்டத்தில் நுழையும் ராசிகள்.. உங்க ராசி இதில் உண்டா பாருங்கள்
பணத்தை பொங்க வைக்கும் புதன்.. அதிர்ஷ்டத்தில் நுழையும் ராசிகள்.. உங்க ராசி இதில் உண்டா பாருங்கள்

புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மீன ராசிகள் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார்.

அதற்குப் பிறகு மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைந்தார். புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

புதன் பகவான் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். நீங்கள் எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்கள். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

மிதுன ராசி

புதன் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு உயர் பதவியை கொடுப்பார்கள். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் சக ஊழியர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். கையில் அதிகம் உங்களுக்கு பணம் வந்து சேரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel