தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: பணத்தில் நீச்சல் போடும் ராசிகள்.. சுக்கிரன் தலைகீழாக கொட்டுகிறார்.. அதிர்ஷ்ட அரியணை ஏறுவது யார்?

Money Luck: பணத்தில் நீச்சல் போடும் ராசிகள்.. சுக்கிரன் தலைகீழாக கொட்டுகிறார்.. அதிர்ஷ்ட அரியணை ஏறுவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 16, 2024 10:44 AM IST

Lord Venus: ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் சுக்கிரன் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்கள் காணலாம்.

பணத்தில் நீச்சல் போடும் ராசிகள்.. சுக்கிரன் தலைகீழாக கொட்டுகிறார்.. அதிர்ஷ்ட அரியணை ஏறுவது யார்?
பணத்தில் நீச்சல் போடும் ராசிகள்.. சுக்கிரன் தலைகீழாக கொட்டுகிறார்.. அதிர்ஷ்ட அரியணை ஏறுவது யார்?

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவக்கிரகங்களாக பொது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். அசுரர்களின் குருவாக சுக்கிரன் திகழ்ந்து வருகின்றார்.

சுக்கிரன் மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் சுக்கிரன் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்கள் காணலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் இதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். 

வீட்டில் மங்கள வாரியங்கள் நடக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் சிறந்த மதிப்புகளை பெற்று வெற்றி பெறுவார்கள். மேலும் படிப்பிற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாக உள்ளார். அதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் சிந்திக்கும் திறனால் முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷப ராசி

சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அதே சமயம் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்கள். பேச்சுத் திறமையால் உங்களுக்கு அனைத்து வேலைகளும் சிறப்பாக முடிவடையும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணத்தால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9