Rasi Palan: பண பையை திறந்து விட்டார் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் கொட்டும் ராசிகள்.. யோகம் ஓடி வருது-here we will see about the zodiac signs that experience money yoga of venus - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasi Palan: பண பையை திறந்து விட்டார் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் கொட்டும் ராசிகள்.. யோகம் ஓடி வருது

Rasi Palan: பண பையை திறந்து விட்டார் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் கொட்டும் ராசிகள்.. யோகம் ஓடி வருது

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 31, 2024 09:52 AM IST

Venus: சுக்கிரனின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இருந்து காணலாம்.

Rasi Palan: பண பையை திறந்து விட்டார் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் கொட்டும் ராசிகள்.. யோகம் ஓடி வருது
Rasi Palan: பண பையை திறந்து விட்டார் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் கொட்டும் ராசிகள்.. யோகம் ஓடி வருது

சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். இதுவரை சிம்ம ராசிகள் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான். கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கன்னி ராசியில் நுழைந்தார் இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும்.

வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வரை இதே கன்னி ராசியில் சுக்கிரன் பயணம் செய்வார். சுக்கிரனின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இருந்து காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் ஐந்தாவது வட்டியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர் நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் 12வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பொருள்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வெற்றிகரமாக வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.

மகர ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்காலம் குறித்த முடிவுகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு பின் தொடர்ந்து வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.