தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mars: மேஷத்தில் பணமழை விளையாட்டு ஆரம்பம்.. செவ்வாய் கொட்ட போகிறார்.. அதிர்ஷ்டம் யாருக்கு பார்க்கலாம் வாங்க

Lord Mars: மேஷத்தில் பணமழை விளையாட்டு ஆரம்பம்.. செவ்வாய் கொட்ட போகிறார்.. அதிர்ஷ்டம் யாருக்கு பார்க்கலாம் வாங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 05, 2024 02:11 PM IST

Lord Mars: செவ்வாய் மீன ராசிகள் பயணம் செய்து வந்தார். தற்போது செவ்வாய் பகவான் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகவும் ஒரு வருடத்திற்கு பிறகு இந்த ராசியில் இவர் பயணம் செய்ய வந்துள்ளார்.

மேஷத்தில் பணமழை விளையாட்டு ஆரம்பம்.. செவ்வாய் கொட்ட போகிறார்.. அதிர்ஷ்டம் யாருக்கு பார்க்கலாம் வாங்க
மேஷத்தில் பணமழை விளையாட்டு ஆரம்பம்.. செவ்வாய் கொட்ட போகிறார்.. அதிர்ஷ்டம் யாருக்கு பார்க்கலாம் வாங்க

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒருவருடைய ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிகவும் அதிக அளவில் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

செவ்வாய் மீன ராசிகள் பயணம் செய்து வந்தார். தற்போது செவ்வாய் பகவான் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகவும் ஒரு வருடத்திற்கு பிறகு இந்த ராசியில் இவர் பயணம் செய்ய வந்துள்ளார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து அதிர்ஷ்டம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்க கூடும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். பயணங்களால் உங்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள். உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும்.

மகர ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்க கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவிற்கு லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். துணிச்சலாக நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel