தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: வேட்டையை தொடங்கிய குரு.. விளையாட்டாக பணத்தில் குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஓடி வருகுது

Money Luck: வேட்டையை தொடங்கிய குரு.. விளையாட்டாக பணத்தில் குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஓடி வருகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 12, 2024 12:40 PM IST

lord Guru Bhagavan: குரு பகவான் ராசி மற்றும் இல்லாது நட்சத்திர இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற ஜூன் 13ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார்.

வேட்டையை தொடங்கிய குரு.. விளையாட்டாக பணத்தில் குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஓடி வருகுது
வேட்டையை தொடங்கிய குரு.. விளையாட்டாக பணத்தில் குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஓடி வருகுது

Guru Bhagavan: நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான் இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், யோகம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவான் ராசி மற்றும் இல்லாது நட்சத்திர இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற ஜூன் 13ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் தேடி வரும். நிதின் நன்மைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மிதுன ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வேலைகளை தொடங்கும் போது நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மன உளைச்சல் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். குரு பகவானால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொடுக்கப்போகின்றது. எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உங்கள் செயல்களால் செல்வம் பெருகும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தந்தையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் திருமண வாழ்க்கையில் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்களின் அனுகிரகம் உங்களுக்கு கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்கள். வாழ்க்கை துணை முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9