தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Udaya Yogam: குருவின் குதூகல பணமழை.. அதிரடி அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குத்தான். யோக விளையாட்டு ஆரம்பம்

Guru Udaya Yogam: குருவின் குதூகல பணமழை.. அதிரடி அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குத்தான். யோக விளையாட்டு ஆரம்பம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 07, 2024 04:57 PM IST

Guru Udaya Yogam: குரு பகவான் ரிஷப ராசிகள் இடம் மாறிய அடுத்த இரண்டு நாட்களில் அஸ்தமனமானார். அஸ்தமன நேரத்தில் கிரகங்களின் சக்தியானது பலவீனமாக இருக்கும். இந்நிலையில் குரு பகவான் இந்த ஜூன் மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் உதயமானார். தற்போது குருபகவானின் உதயமானது.

குருவின் குதூகல பணமழை.. அதிரடி அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குத்தான். யோக விளையாட்டு ஆரம்பம்
குருவின் குதூகல பணமழை.. அதிரடி அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குத்தான். யோக விளையாட்டு ஆரம்பம்

குரு பகவான் ரிஷப ராசிகள் இடம் மாறிய அடுத்த இரண்டு நாட்களில் அஸ்தமனமானார். அஸ்தமன நேரத்தில் கிரகங்களின் சக்தியானது பலவீனமாக இருக்கும். இந்நிலையில் குரு பகவான் இந்த ஜூன் மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் உதயமானார். தற்போது குருபகவானின் உதயமானது. அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அந்த சிறப்பான பலன்களை பெற போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

சிம்ம ராசி

குரு பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலையை மாற்ற விரும்புவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் தொழில் விரிவாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். வழக்கத்தை விட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியின் சிறந்து விளங்குவார்கள். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி

குரு பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel