Money Luck: போட்டு தாக்க போகும் செவ்வாய்.. பணம் புரள போகிறது.. மூன்று ராசிகள் உச்சம்
Lord Mars: ரிஷப ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்ததால் அதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் இவருடைய ரிஷப ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mars: நவகிரகங்களில் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 28, 2025 02:58 PMMoney Luck: குரு குறி வைத்த ராசிகள் யார்?.. நட்சத்திர பெயர்ச்சியால் நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்குமா?
Mar 28, 2025 12:36 PMராகு கேது பலன்கள்: ராகு கேது பணக்கார யோகத்தை பெறப்போகின்ற ராசிகள் யார் தெரியுமா?.. உங்க ராசி இருக்கா?
Mar 28, 2025 07:00 AMBad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!
Mar 28, 2025 06:35 AMஇரட்டை ராஜ யோகம்.. மீன ராசியில் சூரியன்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் மூன்று ராசிகள்.. நல்ல லாபம் கிட்டும்!
Mar 28, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : சவால்களை தைரியமா எதிர் கொள்ளுங்கள்.. வெற்றி தேடி வரும்.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
இவர் கடந்த ஜூன் 12-ம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சுக்கிர பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். ரிஷப ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்ததால் அதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் இவருடைய ரிஷப ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
உங்கள் ராசிகள் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு அதிக புத்திசாலித்தனம் இருக்கக்கூடும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வருமானம் பெறுக கூடிய சூழ்நிலைகள் அமையும்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். முழுமையற்ற வேலைகள் உங்களுக்கு முடிந்துவிடும். சொத்துக்களால் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு இருக்கும். கூட்டு வியாபாரம் முறையில் உங்களுக்கு நல்ல பணத்தை பெற்று தரும்.
கும்ப ராசி
உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் பெருகும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட வேலைகள் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். அனைத்து வேலைகளிலும் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிக்கி கடந்த பணம் உங்களை வந்து சேரும். சொத்து மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். புத்திசாலித்தனம் மற்றும் செயல் திறன்கள் அதிகரிக்கப்படும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சம்பாதித்த பணத்தை சேமிக்கக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். மன தைரியம் மற்றும் துணிச்சல் அதிகரிக்கப்படும்.
பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அனைத்து செயல்களிலும் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
