Perfidy Rasis: இயற்கையாகவே துரோகம் செய்யக்கூடிய ராசிகள்.. ரொம்ப கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதில் இருக்கா?
Perfidy Rasis: எளிதில் மற்றவர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய ராசிக்காரர்கள் உள்ளன. இயல்பாக இவர்களிடம் பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். அந்த வகையில் மற்றவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

Perfidy Rasis:: நமது வாழ்க்கையில் பல்வேறு விதமான உணர்வுகளுடன் பயணம் செய்து வருவது வழக்கம். இருக்கணும் எந்த சூழல்களிலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது நம்பிக்கை துரோகம். பலரும் இந்த நம்பிக்கை துரோகத்தை கட்டாயம் வாழ்க்கையில் சந்தித்து இருப்பார்கள். அடிக்கடி இதுபோன்ற துரோகத்தை சிலர் தங்களது வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.
அந்த வகையில் இதற்கான முழுமையான விளக்கம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களின் அடிப்படையில் ஒரு சிலர் இயல்பான குணாதிசயத்தை பெற்றெடுப்பார்கள் அப்படி எளிதில் மற்றவர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய ராசிக்காரர்கள் உள்ளன. இயல்பாக இவர்களிடம் பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். அந்த வகையில் மற்றவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
விருச்சிக ராசி
இவர்கள் எப்போதும் தனித்துவமான குணாதிசயம் கொண்டவர்கள் தங்களுக்கான விஷயத்தில் எப்போதும் திட்டமிட்ட ஆழமாக செயல்பட கூடியவர்கள் சில நேரங்களில் சிலருக்கு இவர்கள் துரோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ரகசியமாக செயல்படக்கூடியது இவர்கள் இயல்பிலேயே இருக்கக்கூடியது அதனால் எப்போதும் இவர்கள் தனித்துவமாக செயல்படுவார்கள்.
அதற்காக மற்றவர்களை அச்சப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. தங்கள் அதிகாரத்தின் கீழ் மற்றவர்களை உட்படுத்த முயற்சி செய்வார்கள். அதற்காக இவர்கள் குழி தோண்டி புதைப்பவர்கள் கிடையாது சில நேரங்களில் அவசியம் ஏற்படும் போது துரோகம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இவர்கள் இறங்குவார்கள். ஆனால் இவர்கள் அசைக்க முடியாத விசுவாசம் கொண்டவர்கள்.
மிதுன ராசி
எப்போதும் இரட்டை சிந்தனை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் வசீகரமாகவும் நேசமானவர்களாகவும் இருக்கக் கூடியவர்கள். சில நேரங்களில் சூழலுக்கு ஏற்ப சில சமயங்களில் போலித்தனமாக நடிப்பார்கள். அது இவர்கள் மீது அன்பு இருப்பவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும்.
இருப்பினும் மற்றவர்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள் அதிகபட்சமாக சுயநலக்காரராக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் ஈடுபடாமல் இருப்பது அன்பிற்குரிய அவர்களுக்கு துரோகமாக தெரியும். தங்கள் விலகி இருப்பதை கண்டு எப்போதும் இவர்கள் குற்ற உணர்ச்சி பெறுவது கிடையாது அதுவே இவர்களுக்கு துரோகத்தின் பட்டத்தை கொடுத்து விடும்.
மேஷ ராசி
மிகவும் ஆக்ரோஷமான மற்றும் அதிக உணர்வு கொண்ட ராசிக்காரர்களாக விளங்கி வரும் இவர்கள் தங்களின் செயல்களின் மீது அதிக ஆர்வம் காட்டக் கூடியவர்கள். இதனால் மற்றவர்களை பற்றி எப்போதும் சிந்திக்க மாட்டார்கள். தங்களுடைய ஆசையை நிறைவேற்றுவதற்கு முழுமூச்சாக செயல்படுவார்கள்.
புதிய அனுபவங்கள் மற்றும் தங்களது திட்டத்தின் கீழ் இவர்கள் செயல் படுகின்ற காரணத்தினால் தங்கள் மீது அன்பு வைத்துள்ளவர்களுக்கு எப்போதும் இவர்கள் ஈடுபாடு காட்டுவது கிடையாது. அதேபோல அவர்களுக்கு ஏதேனும் நிகழ்வு ஏற்படும் போது அதனை விட்டு இவர்கள் விலகி இருக்கின்ற காரணத்தினால் அது துரோகத்தின் அடிப்படையில் வந்துவிடும். மற்றவர்களை விட்டு விலகி இருப்பதை இவர்கள் எப்போதும் முன்னெடுத்துச் செல்கின்ற காரணத்தினால் இவர்கள் மீது அன்பு வைத்திருக்கிறவர்கள் துரோகத்திற்கு உட்படுவார்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
