தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Siva Rasis: சிவனின் செல்லமான ராசிகள் இவர்கள்தான்.. இந்த ராசிகளை தாங்குவார்.. ஆசிர்வாதத்தை கொட்டுவார்

Lord Siva Rasis: சிவனின் செல்லமான ராசிகள் இவர்கள்தான்.. இந்த ராசிகளை தாங்குவார்.. ஆசிர்வாதத்தை கொட்டுவார்

Suriyakumar Jayabalan HT Tamil
May 23, 2024 12:04 PM IST

Lord Siva: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில ராசிகள் சிவபெருமானின் அன்பை எளிதில் தரக்கூடிய ராசிகளாக திகழ்ந்து வருகின்றனர். கடுமையான தவம் மற்றும் விரதத்தை மேற்கொண்டால் மட்டுமே சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற முடியும். இருப்பினும் ஒரு சில ராசிகள் வேண்டுதல்கள் மூலமே சிவபெருமானின் ஆசிகளை பெறுவார்கள்.

சிவபெருமானின் அன்பை எளிதில் தரக்கூடிய ராசிகளாக திகழ்ந்து வருகின்றனர். கடுமையான தவம் மற்றும் விரதத்தை மேற்கொண்டால் மட்டுமே சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற முடியும். இருப்பினும் ஒரு சில ராசிகள் வேண்டுதல்கள் மூலமே சிவபெருமானின் ஆசிகளை பெறுவார்கள்.
சிவபெருமானின் அன்பை எளிதில் தரக்கூடிய ராசிகளாக திகழ்ந்து வருகின்றனர். கடுமையான தவம் மற்றும் விரதத்தை மேற்கொண்டால் மட்டுமே சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற முடியும். இருப்பினும் ஒரு சில ராசிகள் வேண்டுதல்கள் மூலமே சிவபெருமானின் ஆசிகளை பெறுவார்கள்.

குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு எத்தனையோ கோயில்கள் உள்ளன. மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சோழர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.

நவகிரகங்கள் சிவபெருமானின் கண் அசைவுகளுக்கு ஊழியம் செய்பவர்களாக விளங்கி வருகின்றனர். தனது வேலையில் இருந்து நவகிரகங்கள் எப்போதும் விலகிச் செல்வது கிடையாது. சிவபெருமானின் அனைத்து மட்டுமே அவர்கள் கட்டுப்படுவார்கள். சிவபெருமானின் ஆசிர்வாதம் எப்போதும் அனைவருக்கும் தேவை.

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில ராசிகள் சிவபெருமானின் அன்பை எளிதில் தரக்கூடிய ராசிகளாக திகழ்ந்து வருகின்றனர். கடுமையான தவம் மற்றும் விரதத்தை மேற்கொண்டால் மட்டுமே சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற முடியும். இருப்பினும் ஒரு சில ராசிகள் வேண்டுதல்கள் மூலமே சிவபெருமானின் ஆசிகளை பெறுவார்கள். அந்த வகையில் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து விடுகின்றார். இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் சிவபெருமானின் சிறப்பு ஆசிர்வாதம் இருக்கும் செவ்வாய் கிரகம் சிவபெருமானின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. சிவபெருமானின் வியர்வை துளியில் இருந்து செவ்வாய் கிரகம் உருவானதாக கூறப்படுகிறது. முறையாக சிவபெருமானை வழிபட்டால் அவருடைய ஆசிர்வாதம் மேஷ ராசிக்கு எப்போதும் கிடைக்கும். எப்போதும் சிவனுக்கு அன்பிற்கினிய ராசியாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள்.

மிதுன ராசி

சிவபெருமானுக்கு விருப்பமான ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். எப்போதும் அவருடைய ஆசிர்வாதம் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். தாராளமாக அவருடைய அன்பு உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் திருமண வாழ்க்கை உள்ளிட்டவைகளில் உங்களுக்கு நிறைவு கொடுத்துக் கொண்டே இருப்பார். திருப்தியான வாழ்க்கை உங்களுக்கு எப்போதும் இருக்கும். சிவபெருமான் அன்பு கொண்ட ராசிகளில் நீங்களும் ஒருவர்.

விருச்சிக ராசி

நீங்களும் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் ராசிகளில் ஒருவர். இதனால் சிவபெருமானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். அவருடைய அன்பால் உங்களுக்கு எந்த சிக்கல்களும் ஏற்படாது. முறையான வழிபாட்டால் உங்களுக்கு சிவபெருமானும் யோகம் கிடைத்துக் கொண்டே இருக்கும். சிவன் கோயில்களுக்கு சென்று அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது. சிவபெருமானின் துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

மகர ராசி

சனி பகவானால் ஆளப்படும் ராசிகளில் நீங்களும் ஒருவர். சனி பகவான் சிவபெருமானுக்கு முதலில் பிடித்த கிரகமாக விளங்கி வருகிறார். சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவராக சனிபகவான் விளங்கி வருகிறார். அதன் காரணமாகவே இவருக்கு ஈஸ்வரன் பட்டம் வழங்கப்பட்டது. சனிபகவான் சனீஸ்வரன் என அழைக்கப்பட்டு வருகிறார். இதன் காரணமாக மகர ராசியில் மீது எப்போதும் சிவபெருமானுக்கு தனி அன்பு உண்டு. அவருடைய ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும். வாழ்க்கையில் முழுமையான அன்பு இருந்து கொண்டே இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel