Guru Asthamanam: விரட்டி விரட்டி அடி விழப்போகும் ராசிகள்.. குரு அஸ்தமனத்தில் அமர்ந்தார்.. இந்த ராசிகள் தப்பிக்க முடியாது
Lord Guru: ரிஷப ராசியில் பயணத்தை தொடங்கிய அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். அஸ்தமன நேரத்தில் கடவுள்களின் பலம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகும்.

Lord Guru: நவகிரகங்களில் குரு பகவான் மங்கள நாயகனாக விளங்கி வருகின்றார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். வருடத்திற்கு ஒருமுறை குருபகவான் தனது இடத்தை மாற்றுவார். அவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 22, 2025 04:14 PMகொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. புதன் மீன ராசியில் நேரடி பயணம்.. எது உங்க ராசி?
Apr 22, 2025 03:17 PMகன்னி டூ சிம்மம்.. மே 18 -ல் நடக்க இருக்கும் கேது பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பெறப்போகும் 2 ராசிகள் யார் யார்?
Apr 22, 2025 02:04 PMஉருவான சதுர்கிரஹி யோகம்! தொழில் வளர்ச்சி, பணவரவு.. அடுத்த 15 நாள்கள் மகிழ்ச்சியில் இருக்க போகும் ராசிகள்
Apr 22, 2025 01:52 PMதுலாம் முதல் மீனம் ராசியினர் வரை.. அட்சய திருதியையில் செய்ய வேண்டிய தானம் என்ன?.. வாங்க வேண்டிய பொருள்கள் எவை?
Apr 22, 2025 01:28 PMராகு பகவான் எந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகிறார் பாருங்க.. செல்வமும் வாய்ப்பும் கைகூடும் யோகம் யாருக்கு!
Apr 22, 2025 01:12 PMராகு பெயர்ச்சி பலன்கள்: கோடி கோடியாய் கொட்ட வருகிறார் ராகு.. பண மழை ராசிகள்.. உங்க ராசி இதுதான் போல!
கடந்த மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார் ஒரு வருட காலம் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் இடமாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் பார்க்கப்படுகிறது.
ரிஷப ராசியில் பயணத்தை தொடங்கிய அடுத்த இரண்டு நாட்களில் குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். அஸ்தமன நேரத்தில் கடவுள்களின் பலம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகும். குரு பகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சில கஷ்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
தனுசு ராசி
குருபகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் வேலைகளில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முடிவுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் நஷ்டமம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உடன் வேலை செய்பவர்களுடன் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் மிகப்பெரிய வெற்றிகள் பெற்று தராது.
கடின உழைப்பு உங்களுக்கு சிறப்பான பலன்களை தருவதற்கு சற்று தாமதமாகவும் நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். கடன் வாங்கும் சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மீன ராசி
உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்கப்படும். எடுத்த வேலைகளை செய்து முடிப்பதற்கு மிகவும் தாமதமான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எதிர்களால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தினரிடம் உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கை துணையோடு உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடமைகள் மீது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
