தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண சூறாவளியோடு வரும் சுக்கிரன்.. ஜாக்பாட்டில் பறக்க போகும் ராசிகள்.. இதில் உங்க ராசி இருக்கா பாருங்க?

பண சூறாவளியோடு வரும் சுக்கிரன்.. ஜாக்பாட்டில் பறக்க போகும் ராசிகள்.. இதில் உங்க ராசி இருக்கா பாருங்க?

Suriyakumar Jayabalan HT Tamil
May 30, 2024 05:54 PM IST

Lord Venus: சுக்கிரனின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பண சூறாவளியோடு வரும் சுக்கிரன்.. ஜாக்பாட்டில் பறக்க போகும் ராசிகள்.. இதில் உங்க ராசி இருக்கா பாருங்க?
பண சூறாவளியோடு வரும் சுக்கிரன்.. ஜாக்பாட்டில் பறக்க போகும் ராசிகள்.. இதில் உங்க ராசி இருக்கா பாருங்க?

சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் விவரமாக கூறுகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சென்றார் சுக்கிரன்.

அதற்குப் பிறகு மே 19ஆம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து தனது சொந்தமான ராசியான ரிஷப ராசிக்கு சென்றார். சுக்கிரனின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

சுக்கிரன் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். பணம் உங்களுக்கு கொட்டப் போகின்றது. அதிர்ஷ்டங்களை தேடிவரும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். 

மனைவியால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

கடக ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு மரியாதை கொடுப்பார்கள் மற்றவர்களிடத்தில் கௌரவம் அதிகரிக்கும். 

பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார் இதனால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களுடன் ஆதரவு கிடைக்கும். 

குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. காதல் திருமணம் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். திருமண வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக செயல்படும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel