Guru Luck 2025: பிச்சுட்டு கொட்டும் குரு.. 3 ராசிகளுக்கு ஜாலி தான்.. யோக ராசி யார் பாருங்க!
zodiac signs: குரு பகவான் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று மிதுன ராசியில் பின்னோக்கிய பயணத்தில் நுழைகின்றார். அதற்குப் பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி அன்று தனது நேரடி இயக்கத்தை தொடங்குகிறார். இந்நிலையில் குரு பகவானின் பின்னோக்கிய பயணத்தால் ஒரு சிலர் ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர்.

Guru Luck 2025: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். வருகின்ற 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் குரு பகவான் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று மிதுன ராசியில் பின்னோக்கிய பயணத்தில் நுழைகின்றார். அதற்குப் பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி அன்று தனது நேரடி இயக்கத்தை தொடங்குகிறார். இந்நிலையில் குரு பகவானின் பின்னோக்கிய பயணத்தால் ஒரு சிலர் ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மிதுன ராசி
குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
நல்ல வருமானம் உங்களைத் தேடி வரும். வங்கி இருப்பு அதிகரிக்கும். செலவுகள் குறையக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். உங்கள் வாழ்க்கையில் முக்கிய முடிவுகள் நல்ல முன்னேற்றத்தை தரும்.
கடக ராசி
குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் 11 வது வீட்டில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து வழிகளிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிக்கி கிடந்த பணம் உங்களை தேடி வரும்.
தனுசு ராசி
குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. உங்களுடைய ராசியில் ஆறாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக தேடி வரப் போகின்றது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சாதகமான பலன்களை உங்களுக்கு நடக்கப் போகின்றது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
