தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Are Going To Have Trouble With Lord Mercury

Mercury: புதன் அஸ்தமனத்தில் அடிக்கப் போகும் ராசிகள்.. கவனமாக இருப்பது நல்லது

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 21, 2024 10:09 AM IST

புதன் பகவானிடம் சிரமப்பட போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவானின் மாற்றம் அனைத்தும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.புதன் பகவான் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மகர ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார்.

கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அன்று மகர ராசியில் புதன் பகவான் அஸ்தமனமானார். ஒரு மாத காலத்திற்கு புதன் பகவான் அஸ்தமன நிலையில் பயணம் செய்வதால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் அஸ்தமனமாகின்றார். வெளிநாடு வாய்ப்புகள் உங்களை தேடி வந்தாலும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நம்பிக்கை இழக்காமல் இருப்பது நல்லது. பண பரிவர்த்தனைகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மேஷ ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அஸ்தமனமாகி உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் காரியங்களில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். சக ஊழியர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்குவார்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாகியுள்ளார். தொழில் சற்று மந்தமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களோடு வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கூட்டு தொழில் முயற்சிகளை தற்போது தள்ளி வைப்பது நல்லது. வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பணம் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்