தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Are Going To Have Trouble In The Month Of February

February: பிப்ரவரியில் சிக்கி சிரமப்படப் போகும் 4 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 07, 2024 09:44 AM IST

பிப்ரவரி மாதத்தில் சிரமப்பட போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்

பிப்ரவரி ராசி பலன்
பிப்ரவரி ராசி பலன்

ட்ரெண்டிங் செய்திகள்

வருடத்தின் இரண்டாவது மாதமாக பிப்ரவரி மாதம் விளங்கி வருகிறது. மிகவும் குறைவான நாட்களைக் கொண்ட மாதமாக இது திகழ்ந்து வருகிறது. இதுவே இந்த மாதத்தில் மிகப்பெரிய சிறப்பாகும். வருடம் முழுவதும் ரகங்களின் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது ஏற்றத்தாழ்வுகள் அனைத்து ராசிகளுக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

அந்த வகையில் கிரக நிலைகளை பொறுத்து இந்த பிப்ரவரி மாதம் 12 ராசிகளுக்கும் வித்தியாசமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக அமைய உள்ளது. அதேபோல சில ராசிக்காரர்களுக்கு சங்கடமான சூழ்நிலை உருவாக உள்ளது. அந்த வகையில் இந்த பிப்ரவரி மாதத்தில் சங்கடங்களை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

இந்த பிப்ரவரி மாதம் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வியாபாரத்தில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை கையாளும் போது எச்சரிக்கை தேவை.

கடக ராசி

 

இந்த மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாக இல்லை பல்வேறு விதமான மோதல்கள் வெடித்து தற்போது சிக்கல்களை உண்டாக்கக்கூடிய சூழ்நிலை அமைந்துள்ளது. எதிரிகளால் பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிக ராசி

 

இந்த மாதம் உங்களுக்கு சிக்கல்கள் தரும் மாதமாக அமையப் போகின்றது. உயர் அலுவலர்களால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெரிய இழப்புகளை தவிர்க்க வேண்டும் என்றால் கடின உழைப்பு மிகவும் தேவை.

தனுசு ராசி

 

இந்த மாதம் உங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடினமான உழைப்பை கொடுத்தால் மிகப்பெரிய பிரதிபலனை பெறலாம். சக பணியாளர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக வாகனம் வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கடன் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.