தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: புதன் சுழற்றி வீசும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.. குடும்பத்தில் மகிழ்ச்சி!

Lord Mercury: புதன் சுழற்றி வீசும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.. குடும்பத்தில் மகிழ்ச்சி!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 01, 2024 02:27 PM IST

Lord Mercury: புதன் பகவானின் கடக ராசி பலன் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து காண்போம்.

புதன் சுழற்றி வீசும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.. குடும்பத்தில் மகிழ்ச்சி!
புதன் சுழற்றி வீசும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.. குடும்பத்தில் மகிழ்ச்சி!

புதன் பகவான் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் முதன் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மிதுன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் ஜூன் 29ஆம் தேதி அன்று கடக ராசியில் நுழைந்தார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசியாகும்.

புதன் பகவானின் கடக ராசி பலன் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து காண்போம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு சிறப்பான சூழ்நிலைகள் அமைந்து முன்னேற்றம் கிடைக்கும். நிறைய பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். 

வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். 

சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9