தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வேட்டையாட போகும் சூரியன்.. பணத்திற்கு எந்த குறையும் இருக்காது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்

வேட்டையாட போகும் சூரியன்.. பணத்திற்கு எந்த குறையும் இருக்காது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 11, 2024 06:04 PM IST

Lord Sun: கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவருடைய கடக ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

வேட்டையாட போகும் சூரியன்.. பணத்திற்கு எந்த குறையும் இருக்காது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்
வேட்டையாட போகும் சூரியன்.. பணத்திற்கு எந்த குறையும் இருக்காது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்

Lord Sun: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கி வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் இடம் மாறும்பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று சூரிய பகவான் கடக ராசிக்கு செல்கிறார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசியாகும்.