Astrology Luck: நாளை செவ்வாய் நுழைகிறார்.. பணத்தில் பெயர்ச்சி அடையும் 4 ராசிகள்.. கொட்டப் போகுது..
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astrology Luck: நாளை செவ்வாய் நுழைகிறார்.. பணத்தில் பெயர்ச்சி அடையும் 4 ராசிகள்.. கொட்டப் போகுது..

Astrology Luck: நாளை செவ்வாய் நுழைகிறார்.. பணத்தில் பெயர்ச்சி அடையும் 4 ராசிகள்.. கொட்டப் போகுது..

Suriyakumar Jayabalan HT Tamil
Published Aug 25, 2024 02:18 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Astrology Luck: நாளை செவ்வாய் நுழைகிறார்.. பணத்தில் பெயர்ச்சி அடையும் 4 ராசிகள்.. கொட்டப் போகுது..
Astrology Luck: நாளை செவ்வாய் நுழைகிறார்.. பணத்தில் பெயர்ச்சி அடையும் 4 ராசிகள்.. கொட்டப் போகுது..

இது போன்ற போட்டோக்கள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி அதாவது நாளை மிதுன ராசிக்கு செல்கிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும்.

செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது பெட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

 

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலைமையில் நல்ல உயர்வு கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பண வரவில்லை இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு தடையில்லாமல் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மீன ராசி

உங்கள் ராசியில் நான்காவது பட்டியல் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். புதிதாக வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். ஏழரை சனி நடக்கின்ற காரணத்தினால் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களோடு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்