Lord Mercury: ரிஷபத்தில் அஸ்தமன பணமழை.. அமைதியாக ஆட்டம் ஆடும் புதன்.. உங்க ராசி இதுதானா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: ரிஷபத்தில் அஸ்தமன பணமழை.. அமைதியாக ஆட்டம் ஆடும் புதன்.. உங்க ராசி இதுதானா?

Lord Mercury: ரிஷபத்தில் அஸ்தமன பணமழை.. அமைதியாக ஆட்டம் ஆடும் புதன்.. உங்க ராசி இதுதானா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 23, 2024 12:21 PM IST

Lord Mercury: புதன் பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். அஸ்தமன நிலையில் கிரகங்களின் பலமானது மிகவும் குறைவாக இருக்கும். இருப்பினும் புதன் பகவானின் அஸ்தமனத்தில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்படுகின்றனர்.

ரிஷபத்தில் அஸ்தமன பணமழை.. அமைதியாக ஆட்டம் ஆடும் புதன்.. உங்க ராசி இதுதானா?
ரிஷபத்தில் அஸ்தமன பணமழை.. அமைதியாக ஆட்டம் ஆடும் புதன்.. உங்க ராசி இதுதானா?

இது போன்ற போட்டோக்கள்

புதன் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல குறுகிய காலம் எடுத்துக் கொள்கின்ற காரணத்தினால் அடிக்கடி தனது இடத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இருப்பினும் அவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் மிகவும் அதிகமாக இருக்கும்.

தற்போது புதன் பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். அஸ்தமன நிலையில் கிரகங்களின் பலமானது மிகவும் குறைவாக இருக்கும். இருப்பினும் புதன் பகவானின் அஸ்தமனத்தில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்படுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தனுசு ராசி

உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் மன அழுத்தம் குறையும்.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த பணிச்சுமை அனைத்தும் குறையும். குடும்பத்தினரால் ஏற்பட்டு வந்த மனு அழுத்தம் குறையும். போதுமான அளவிற்கு உங்களுக்கு பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான சூழ்நிலைகள் அமையும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கக்கூடும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய வேலைகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உறவினர்களை பொறுத்தவரை நல்ல பலமாக அமையும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9