தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி மழையாக பணத்தை கொட்டுகிறார்.. வாரிக் கொள்ளும் ராசிகள்.. வந்துவிட்டது உங்களுக்கு யோகம்

சனி மழையாக பணத்தை கொட்டுகிறார்.. வாரிக் கொள்ளும் ராசிகள்.. வந்துவிட்டது உங்களுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 26, 2024 01:05 PM IST

Lord Sani: சனி பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலை அடைகிறார். இவருடைய பின்னோக்கிய பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவம்பர் மாதம் வரை இதே வக்கிர நிலையில் சனி பகவான் பயணம் செய்ய உள்ளார்.

சனி மழையாக பணத்தை கொட்டுகிறார்.. வாரிக் கொள்ளும் ராசிகள்.. வந்துவிட்டது உங்களுக்கு யோகம்
சனி மழையாக பணத்தை கொட்டுகிறார்.. வாரிக் கொள்ளும் ராசிகள்.. வந்துவிட்டது உங்களுக்கு யோகம்

சனி பகவான் கும்பம் மற்றும் மகர ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இவர் திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் சனிபகவான் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் மிக ராசியில் பயணம் செய்வார். இதனால் இது சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.

சனி பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலை அடைகிறார். இவருடைய பின்னோக்கிய பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவம்பர் மாதம் வரை இதே வக்கிர நிலையில் சனி பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை கிடைக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு ஜூன் 29 முதல் பொற்காலம் வரப்போகின்றது. பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேஷ ராசி

உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு மங்களகரமான யோகம் உருவாகியுள்ளது. வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்பம் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

வழக்கத்தைவிட உங்களுக்கு சிறப்பான பலன்கள் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் தேடிக் கொண்டிருந்த வேலை உங்களுக்கு கிடைக்கக்கூடும். 

ஜூன் மாதம் இறுதியில் இருந்து உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தால் உங்களுக்கு ஆனந்தம் அதிகமாக போகின்றது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9