தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி காகத்தில் ஏறினார்.. பணத்தைக் கொட்டுவார்.. யோக ராசிகள் யார்? வாங்க பார்க்கலாம்

Lord Sani: சனி காகத்தில் ஏறினார்.. பணத்தைக் கொட்டுவார்.. யோக ராசிகள் யார்? வாங்க பார்க்கலாம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 11, 2024 02:33 PM IST

Lord Sani: சனி ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் 139 நாட்கள் சனி பகவான் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

சனி காகத்தில் ஏறினார்.. பணத்தைக் கொட்டுவார்.. யோக ராசிகள் யார்? வாங்க பார்க்கலாம்
சனி காகத்தில் ஏறினார்.. பணத்தைக் கொட்டுவார்.. யோக ராசிகள் யார்? வாங்க பார்க்கலாம்

நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார்.

இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் 139 நாட்கள் சனி பகவான் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளப் போகின்றார். இதனால் உங்களுக்கு பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

துலாம் ராசி

சனிபகவான் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் நோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடும். புதிய தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். 

வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சனி பகவானின் அருளால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் 11வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் உங்களுக்கு முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. புதிய முதலீடுகளால் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel