தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani Sambavam: சனி ஒரு சம்பவக்காரர்.. பணத்தை வீசி எறிய போகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்கதான்.. வாங்க பாக்கலாம்!

Lord Sani Sambavam: சனி ஒரு சம்பவக்காரர்.. பணத்தை வீசி எறிய போகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்கதான்.. வாங்க பாக்கலாம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 06, 2024 10:59 AM IST

Lord Sani: ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி ஒரு சம்பவக்காரர்.. பணத்தை வீசி எறிய போகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்கதான்.. வாங்க பாக்கலாம்!
சனி ஒரு சம்பவக்காரர்.. பணத்தை வீசி எறிய போகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்கதான்.. வாங்க பாக்கலாம்!

நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் நுழைந்து பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு யோகத்தை கொடுத்த போகின்றது. பணவரவில் இருந்து குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். இந்த காலகட்டத்தில் எங்களுடைய திறமை வெளிப்படும். எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். 

ஒரே நேரத்தில் பல்வேறு விதமான பணிகளை கண்டு நீங்கள் வெற்றி காண்பீர்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

ரிஷப ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களோடு ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பல்வேறு விதமான சிரமங்கள் உங்களுக்கு குறையும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உயர் அலுவலர்களின் நம்பிக்கை மற்றும் பாராட்டை நீங்கள் பெறுவீர்கள். 

தொழில் வாழ்க்கையில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மேஷ ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel