தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பணத்தில் விளையாடும் ராசிகள்.. பீரோவை திறந்து வைக்கும் ராசிகள்.. யோகம் உங்களுக்குத்தான்!

குரு பணத்தில் விளையாடும் ராசிகள்.. பீரோவை திறந்து வைக்கும் ராசிகள்.. யோகம் உங்களுக்குத்தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 06, 2024 05:24 PM IST

Guru Bhagavan: ஜூன் மாத தொடக்கத்தில் அஸ்தமன நிலையில் இருந்து உதயம் ஆகின்றார். குருபகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு பணத்தில் விளையாடும் ராசிகள்.. பீரோவை திறந்து வைக்கும் ராசிகள்.. யோகம் உங்களுக்குத்தான்!
குரு பணத்தில் விளையாடும் ராசிகள்.. பீரோவை திறந்து வைக்கும் ராசிகள்.. யோகம் உங்களுக்குத்தான்!

குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றால் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவானின் இடமாற்றம் தற்போது சிறப்பாக அமைந்துள்ளது. ரிஷப ராசிக்கு சென்ற அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனமானார்.

இந்நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் அஸ்தமன நிலையில் இருந்து உதயம் ஆகின்றார். குருபகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட இலக்குகள் அனைத்தும் வெற்றி அடையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் உதயம் ஆகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. நிலவில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும். 

நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது பெட்டியில் குரு பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. கணவன் மனைவிக்கடைய அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel