Guru: பின்னோக்கிய பயணத்தில் வரும் குரு.. 2025 வரை பணத்தில் குளிக்கும் ராசிகள்.. ஜாலியான வாழ்க்கை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru: பின்னோக்கிய பயணத்தில் வரும் குரு.. 2025 வரை பணத்தில் குளிக்கும் ராசிகள்.. ஜாலியான வாழ்க்கை

Guru: பின்னோக்கிய பயணத்தில் வரும் குரு.. 2025 வரை பணத்தில் குளிக்கும் ராசிகள்.. ஜாலியான வாழ்க்கை

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 22, 2024 01:53 PM IST

Guru: குரு பகவான் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். வரும் 2025 பிப்ரவரி நான்காம் தேதி வரை இதே நிலைகள் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்க உள்ளது.

பின்னோக்கிய பயணத்தில் வரும் குரு.. 2025 வரை பணத்தில் குளிக்கும் ராசிகள்.. ஜாலியான வாழ்க்கை
பின்னோக்கிய பயணத்தில் வரும் குரு.. 2025 வரை பணத்தில் குளிக்கும் ராசிகள்.. ஜாலியான வாழ்க்கை

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். வரும் 2025 பிப்ரவரி நான்காம் தேதி வரை இதே நிலைகள் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல யோசத்தை கொடுத்துள்ளது. உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு நேர்மறையான முடிவுகள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். 

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் செலவுகள் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கடக ராசி

குருபகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும். சிக்கிகிடந்த பணம் உங்களை சேர்ந்து தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் குரு பகவான் ஆறாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் அனைத்து வேலைகளும் உங்களுக்கு விரைவாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். 

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் அமைதி மற்றும் மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வர போகின்றது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9