Lord Surya: கடத்தி கஷ்டப்படுத்த போகும் சூரியன்.. தலைகீழாக அடி விழும் ராசிகள்.. சிக்கிய ராசிகளில் நீங்கள் உண்டா?
Lord Surya: சூரிய பகவான் மே 14 ஆம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். சூரியன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றன.

Lord Surya: நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.
இவருடைய ஒவ்வொரு ராசி மாற்றம் பொழுதும் தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருக்கும்பொழுது அவர்களுக்கான அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் சூரிய பகவான் மே 14 ஆம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். சூரியன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றன. இதனால் சில ராசிகளுக்கு நன்மைகள் உண்டானாலும் ஒரு சில ராசிகளுக்கு சிரமமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த ஒரு மாத காலம் உங்களுக்கு நிலையான சூழ்நிலை இருக்காது. பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாக இருக்கும்.
நிறைய பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் பலவீனமான சூழ்நிலைகள் உண்டாகும். பணத்தை சேமிப்பதற்கு சற்று தாமதமாகும். ஒரு மாத காலம் உங்களுக்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலை உண்டாகும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி ரீதியாக சாதகமற்ற சூழ்நிலை உண்டாகும். திட்டமிட்ட செலவுகள் உங்களுக்கு அதிகமாவதற்கு நிறை வாய்ப்புகள் உள்ளது.
எதிர்பாராத நேரத்தில் பல்வேறு விதமான செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் கஷ்டம் ஏற்பட உங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. புதிய முதலீடுகள் செய்வதை தற்போது தவிர்ப்பது நல்லது.
தேவையற்ற இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை இருக்கும்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார், இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். கடன் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உங்களை மன உளைச்சல் ஏற்படுத்தும்.
புதிய முடிவுகளை தற்போது எடுப்பது நல்லது கிடையாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பயணங்கள் செல்லும் போது உங்கள் உடமைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். முடிந்தவரை முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து தள்ளி இருப்பது நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
