Lord Sani: சனி வக்ர பணமழை.. அதிர்ஷ்டத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. புரட்டி எடுக்கப் போவது உறுதி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி வக்ர பணமழை.. அதிர்ஷ்டத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. புரட்டி எடுக்கப் போவது உறுதி

Lord Sani: சனி வக்ர பணமழை.. அதிர்ஷ்டத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. புரட்டி எடுக்கப் போவது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 22, 2024 01:00 PM IST

Lord Sani: ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை பேரின்பம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி வக்ர பணமழை.. அதிர்ஷ்டத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. புரட்டி எடுக்கப் போவது உறுதி
சனி வக்ர பணமழை.. அதிர்ஷ்டத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. புரட்டி எடுக்கப் போவது உறுதி

இது போன்ற போட்டோக்கள்

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ஒரு 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை பேரின்பம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனிபகவான் வக்கிரப் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நீண்ட நாட்களாக வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஜூன் மாதம் இறுதியில் இருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்

மேஷ ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் வக்கிரப் பெயர்ச்சி அடைகிறார். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப்போகின்றது. மங்களகரமான யோகம் உங்களுக்கு கிடைக்க உள்ளது. வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். ஏற்கனவே செய்த முதலீடுகள் உங்களுக்கு தற்போது இரட்டிப்பான லாபத்தை பெற்று தரும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மகர ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் வக்கிரப் பெயர்ச்சி அடைகிறார். இதனால் உங்களுக்கு ஜூன் 29 முதல் பொற்காலமாக மாறப்போகின்றது. பேச்சுத் திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வணிகத்தில் உங்களுக்கு சிக்கிக் கடந்த பணம் உங்களை தேடி வரும். புதிய சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9