தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: ரத்தக்கண்ணீர் தரும் சனி.. கதற கதற ஓடும் ராசிகள்.. பின்னாடி வருகிறார் சனி..!

Lord Sani: ரத்தக்கண்ணீர் தரும் சனி.. கதற கதற ஓடும் ராசிகள்.. பின்னாடி வருகிறார் சனி..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 05, 2024 12:48 PM IST

Lord Sani: சனி பகவானின் பின்னோக்கிய பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரத்தக்கண்ணீர் தரும் சனி.. கதற கதற ஓடும் ராசிகள்.. பின்னாடி வருகிறார் சனி..!
ரத்தக்கண்ணீர் தரும் சனி.. கதற கதற ஓடும் ராசிகள்.. பின்னாடி வருகிறார் சனி..!

Lord Sani: நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் கர்மநாயகனாக விளங்கி வருகின்றார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனி பகவான் நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.