தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sun: கல்யாண யோகம் தரும் சூரியன்.. பணத்தில் குதிப்பது இந்த ராசிகள் தான்.. நீங்க என்ன ராசி?

Lord Sun: கல்யாண யோகம் தரும் சூரியன்.. பணத்தில் குதிப்பது இந்த ராசிகள் தான்.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 27, 2024 04:08 PM IST

Lord Surya: சூரிய பகவான் மிதுன ராசிக்கு செல்கின்ற காரணத்தினால் அதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சூரிய பகவானின் இந்த பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கல்யாண யோகம் தரும் சூரியன்.. பணத்தில் குதிப்பது இந்த ராசிகள் தான்.. நீங்க என்ன ராசி?
கல்யாண யோகம் தரும் சூரியன்.. பணத்தில் குதிப்பது இந்த ராசிகள் தான்.. நீங்க என்ன ராசி?

Lord Sun: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒவ்வொரு முறையும் தனது ராசியை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகைகள் ரிஷப ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.

அதன் காரணமாக சூரிய பகவான் மிதுன ராசிக்கு செல்கின்ற காரணத்தினால் அதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சூரிய பகவானின் இந்த பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். முக்கியமான முடிவுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். விரும்பிய இடத்திற்கு உங்களுக்கு இடம் மாற்றம் கிடைக்கும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குழந்தை தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்க கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9