தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Luck 2024: குரு கோடீஸ்வர ராசிகள்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது.. பணத்தில் மிதப்பது உறுதி

Guru Luck 2024: குரு கோடீஸ்வர ராசிகள்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது.. பணத்தில் மிதப்பது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 07, 2024 02:51 PM IST

Guru Bhagavan: குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்து வந்தார். வருகின்ற ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்கிறார். குரு பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது.

குரு கோடீஸ்வர ராசிகள்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது.. பணத்தில் மிதப்பது உறுதி
குரு கோடீஸ்வர ராசிகள்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது.. பணத்தில் மிதப்பது உறுதி

குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இந்த ஆண்டு இடமாற்றம் செய்த பெரிய கிரகம் குரு பகவான் தான். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்து வந்தார். வருகின்ற ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்கிறார். குரு பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மிதுன ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பண வரவில்லை எந்த குறையும் இருக்காது. எடுத்துக் கொண்ட காரியங்கள் வெற்றி அடையும். 

நிதி நிலைமையில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மன உளைச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

கடக ராசி

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை முழுமையாக கொடுக்க போகின்றது. செல்வத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து நிவர்த்தி அடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்