தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  July: அதிர்ஷ்டத்தில் ஜொலிக்கும் ராசிகள்.. புதன் ஜூலை பணமழை ஆரம்பம்.. உங்களுக்கு யோகம் உச்சம் தான்!

July: அதிர்ஷ்டத்தில் ஜொலிக்கும் ராசிகள்.. புதன் ஜூலை பணமழை ஆரம்பம்.. உங்களுக்கு யோகம் உச்சம் தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 05, 2024 02:04 PM IST

Lord Mercury: ஜூன் 29ஆம் தேதி அன்று கடக ராசியில் நுழைந்தார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

அதிர்ஷ்டத்தில் ஜொலிக்கும் ராசிகள்.. புதன் ஜூலை பணமழை ஆரம்பம்.. உங்களுக்கு யோகம் உச்சம் தான்!
அதிர்ஷ்டத்தில் ஜொலிக்கும் ராசிகள்.. புதன் ஜூலை பணமழை ஆரம்பம்.. உங்களுக்கு யோகம் உச்சம் தான்!

அந்த வகையில் மிதுன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று கடக ராசியில் நுழைந்தார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் நான்காவது பெட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். 

நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது சேமிப்பு அதிகரிக்கப்படும். கூட்டுத் தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணை உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் உங்கள் கையை தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிலுவையில் உள்ள தொகைகள் உங்களைத் தேடி வரும். 

சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் தீரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவார்கள். உயர அலுவலர்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை அள்ளிக் கொடுப்பார்கள். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9