Rajayoga Luck: சிம்மத்தில் கண்ணை திறந்த புதன்.. மூச்சு முட்ட பணத்தில் குளிக்கப் போகும் ராசிகள்.. ஆரம்பிக்கலாமா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rajayoga Luck: சிம்மத்தில் கண்ணை திறந்த புதன்.. மூச்சு முட்ட பணத்தில் குளிக்கப் போகும் ராசிகள்.. ஆரம்பிக்கலாமா!

Rajayoga Luck: சிம்மத்தில் கண்ணை திறந்த புதன்.. மூச்சு முட்ட பணத்தில் குளிக்கப் போகும் ராசிகள்.. ஆரம்பிக்கலாமா!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 09, 2024 01:56 PM IST

Rajayoga Luck: சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் சிம்மராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்மத்தில் கண்ணை திறந்த புதன்.. மூச்சு முட்ட பணத்தில் குளிக்கப் போகும் ராசிகள்.. ஆரம்பிக்கலாமா!
சிம்மத்தில் கண்ணை திறந்த புதன்.. மூச்சு முட்ட பணத்தில் குளிக்கப் போகும் ராசிகள்.. ஆரம்பிக்கலாமா!

இது போன்ற போட்டோக்கள்

புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு புத்திசாலித்தனம் உச்சத்தில் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் தற்போது கடக ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூலை 19ஆம் தேதி சிம்ம ராசியில் நுழைகின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். 

சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் சிம்மராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய போகின்றார். இதனால் மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவிற்கு உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். 

தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும் உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பார்த்த நேரத்தில் அனைத்து காரியங்களும் நடக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். குடும்ப வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். 

கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உங்களுக்கு ஏற்றவாறு சூழ்நிலைகள் அமையும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9