தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Venus: சுக்கிரனின் ஆடம்பர வாழ்க்கை வந்துவிட்டது.. யோக ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி என்ன?

Venus: சுக்கிரனின் ஆடம்பர வாழ்க்கை வந்துவிட்டது.. யோக ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 23, 2024 04:38 PM IST

Venus: சுக்கிர பகவான் மிதுன ராசியில் பயணம் செய்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சுக்கிரனின் ஆடம்பர வாழ்க்கை வந்துவிட்டது.. யோக ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி என்ன?
சுக்கிரனின் ஆடம்பர வாழ்க்கை வந்துவிட்டது.. யோக ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி என்ன?

Venus: நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஆடம்பரம் சொகுசு காதல் அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிரன் இதுவரை ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். சுக்கிரன் கடந்த ஜூன் 12-ம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசியான மிதுன ராசியில் நுழைந்தார். ஒவ்வொரு ராசி மாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிர பகவான் மிதுன ராசியில் பயணம் செய்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது பெட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பார்த்து காத்திருந்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் சுக்கிரன் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மகத்தான செல்வம் கிடைக்கப் போகின்றது. பண வரவில் இருந்த குறையும் இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்து முடிவடையும். குடும்பத்தில் நல்ல நேரம் தொடக்கப் போகின்றது. புதிய வாய்ப்புகள் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெற்று தரும். 

வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களின் ஆதரவால் உங்களுக்கு பெரிய முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுக்கிரனின் அருளால் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறைந்து வாழ்க்கையில் முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9