தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: கொட்டிக் கொண்டே வரும் சூரியன்.. பண மழையில் சிக்கிய ராசிகள்.. விடாமல் நனையப்போவது யார்?

Money Luck: கொட்டிக் கொண்டே வரும் சூரியன்.. பண மழையில் சிக்கிய ராசிகள்.. விடாமல் நனையப்போவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 29, 2024 04:53 PM IST

Lord Sun: சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது.

கொட்டிக் கொண்டே வரும் சூரியன்.. பண மழையில் சிக்கிய ராசிகள்.. விடாமல் நனையப்போவது யார்?
கொட்டிக் கொண்டே வரும் சூரியன்.. பண மழையில் சிக்கிய ராசிகள்.. விடாமல் நனையப்போவது யார்?

Lord Sun: நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நவகிரகங்களில் அரசனாக விளங்க கூடியவர் சூரிய பகவான் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக நவகிரகங்களில் சூரிய பகவான் வளர்ந்து வருகின்றார். நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் புதன் பகவானின் மிதுன ராசியில் நுழைந்தார். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். தொழிலில் முக்கிய முடிவுகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் உங்களுக்கு வலிமையான சூழ்நிலைகள் அமையும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9