தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண மூட்டையை கொட்டத் தொடங்கினார் சுக்கிரன்.. வாயை பிளந்த ராசிகள்.. யோகம் யாருக்கு?

பண மூட்டையை கொட்டத் தொடங்கினார் சுக்கிரன்.. வாயை பிளந்த ராசிகள்.. யோகம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 29, 2024 03:30 PM IST

Lord Venus: ஜூலை மாதம் சந்திர பகவானின் சொந்தமான ராசியான கடக ராசியில் நுழைகின்றார். சுக்கிரனின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பண மூட்டையை கொட்டத் தொடங்கினார் சுக்கிரன்.. வாயை பிளந்த ராசிகள்.. யோகம் யாருக்கு?
பண மூட்டையை கொட்டத் தொடங்கினார் சுக்கிரன்.. வாயை பிளந்த ராசிகள்.. யோகம் யாருக்கு?

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான ஆடம்பர வாழ்க்கையும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது சுக்கிரன் அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இவர் வருகின்ற ஜூலை மாதம் சந்திர பகவானின் சொந்தமான ராசியான கடக ராசியில் நுழைகின்றார். சுக்கிரனின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் முதல் வெற்றி சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். 

திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டி தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு அறிய வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். லாபம் தரக்கூடிய அனைத்து வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பளம் உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். 

புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுவரை கைக்கு வராத பணம் உங்களைத் தேடி வரும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்கள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் வியாபாரத்தில் தடைபட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9