உதயத்தால் உச்சம் செல்லும் ராசிகள்.. பணத்தில் குளிக்க வைக்கும் புதன்.. அதிர்ஷ்டம் வருகிறது!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  உதயத்தால் உச்சம் செல்லும் ராசிகள்.. பணத்தில் குளிக்க வைக்கும் புதன்.. அதிர்ஷ்டம் வருகிறது!

உதயத்தால் உச்சம் செல்லும் ராசிகள்.. பணத்தில் குளிக்க வைக்கும் புதன்.. அதிர்ஷ்டம் வருகிறது!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 23, 2024 02:54 PM IST

Lord Mercury: புதன் பகவானின் துலாம் ராசி உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சாதகமான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

உதயத்தால் உச்சம் செல்லும் ராசிகள்.. பணத்தில் குளிக்க வைக்கும் புதன்.. அதிர்ஷ்டம் வருகிறது!
உதயத்தால் உச்சம் செல்லும் ராசிகள்.. பணத்தில் குளிக்க வைக்கும் புதன்.. அதிர்ஷ்டம் வருகிறது!

இது போன்ற போட்டோக்கள்

புதன் பகவான் தன்னம்பிக்கை, நரம்பு, வியாபாரம், படிப்பு, பேச்சு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் தற்போது துலாம் ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

அந்த வகையில் புதன் பகவான் அக்டோபர் 22ஆம் தேதி அன்று துலாம் ராசியில் உதயமானார். புதன் பகவானின் துலாம் ராசி உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சாதகமான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

புதன் பகவானின் உதயத்தால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்திருக்கும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி தேடி தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் சேமிப்புகள் அதிகரிக்கும். நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி

புதன் பகவானால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. அவருடைய உதயத்தால் உங்கள் குடும்பத்தில் வளர்ச்சி அதிகரிக்கப் போகின்றது. குடும்ப பொறுப்புகளில் நீங்கள் அர்ப்பணிப்போடு செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். 

உயர் அலுவலர்களால் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மன ஆரோக்கியம் உங்களுக்கு அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு அதிகரிக்கும்.

துலாம் ராசி

புதன் பகவானின் உதயம் உங்கள் ராசியில் நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு பணி நிமித்தமாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். யோகத்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 

அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சேமிப்பு உங்களுக்கு அதிகரிக்கக்கூடும். உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.