தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி கை இறங்கிவிட்டது.. பண மூட்டையை தாவி பிடித்த ராசிகள்.. அதிர்ஷ்டம் யாரை தேடி வருகிறது?

சனி கை இறங்கிவிட்டது.. பண மூட்டையை தாவி பிடித்த ராசிகள்.. அதிர்ஷ்டம் யாரை தேடி வருகிறது?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 27, 2024 10:37 AM IST

Lord Sani: ஜூன் 29ஆம் தேதி என்று கும்ப ராசியில் வக்கிர நிலை அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவருடைய வக்கிர நிலை நவம்பர் மாதம் வரை நீடிக்கும். இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி கை இறங்கிவிட்டது.. பண மூட்டையை தாவி பிடித்த ராசிகள்.. அதிர்ஷ்டம் யாரை தேடி வருகிறது?
சனி கை இறங்கிவிட்டது.. பண மூட்டையை தாவி பிடித்த ராசிகள்.. அதிர்ஷ்டம் யாரை தேடி வருகிறது?

Lord Sani: நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனிபகவான் கர்மநாயகனாக விளங்குகின்ற காரணத்தினால் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக கொடுப்பார். அதனால் சனி பகவானுக்கு என்றால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான கிரகமாக விளங்கக்கூடிய கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இதே ராசியில் பயணம் செய்வார். அதன் காரணமாக இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார் சனி பகவான். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி என்று கும்ப ராசியில் வக்கிர நிலை அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவருடைய வக்கிர நிலை நவம்பர் மாதம் வரை நீடிக்கும். இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிலையடைகிறார். இதனால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப்போகிறது. ஜூலை மாதத்தில் இருந்து உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். பணவரவிலிருந்த குறையும் இருக்காது. பேச்சுத் திறமையால் காரியங்கள் முடிவடையும். 

நல்ல முன்னேற்றம் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வணிகத்தில் சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் 11வது வீட்டில் சனி பகவான் வக்கிர நிலை அடைகிறார். இது உங்களுக்கு மங்களகரமான யோகத்தை கொடுக்க போகின்றது. இதனால் உங்களுக்கு மிகப்பெரிய வருமானம் அதிகரிப்பு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

குடும்பம் மற்றும் வாழ்க்கை துணை உறவு உங்களுக்கு சுமுகமாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல யோகத்தை தரும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிலை அடைகிறார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள். உங்களுக்கு கிடைக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9