தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru Bhagavan: குரு கபடி விளையாட தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு வெற்றி.. பணம் வருகிறது

Lord Guru Bhagavan: குரு கபடி விளையாட தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு வெற்றி.. பணம் வருகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 26, 2024 05:34 PM IST

Lord Guru Bhagavan: குரு பகவான் ஜூன் மூன்றாம் தேதி அன்று உதயமானார். உதயத்திற்கு பிறகு ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து வருகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு கபடி விளையாட தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு வெற்றி.. பணம் வருகிறது
குரு கபடி விளையாட தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு வெற்றி.. பணம் வருகிறது

குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகத்தின் இடமாற்றமாக குரு பகவானின் இடப்பெயர்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு வந்தார்.

அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். அஸ்தமன நிலையில் அனைத்து ராசிகளுக்கும் குரு பகவானின் தாக்கமானது சிக்கலை ஏற்படுத்தும். இந்நிலையில் குரு பகவான் ஜூன் மூன்றாம் தேதி அன்று உதயமானார். உதயத்திற்கு பிறகு ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து வருகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு குழந்தை தொடர்பான விஷயங்களில் நல்ல செய்தி தேடி வரும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். எழுத்து தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குரு பகவான் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வருமானம் இரட்டிப்பாக கிடைக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது. பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அவர்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குருபகவான் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை முன்பே இருந்தது விட சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் இரட்டிப்பான முன்னேற்றத்தை உங்களுக்கு பெற்றுத் தரும். திருமணமானவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9