தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: குரு வேட்டையை தொடங்கினார்.. பணத்தில் நீராடும் ராசிகள்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது

Lord Guru: குரு வேட்டையை தொடங்கினார்.. பணத்தில் நீராடும் ராசிகள்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 08, 2024 11:48 AM IST

Guru Bhagavan: ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குரு வேட்டையை தொடங்கினார்.. பணத்தில் நீராடும் ராசிகள்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது
குரு வேட்டையை தொடங்கினார்.. பணத்தில் நீராடும் ராசிகள்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது

Guru Bhagavan: நவ கிரகங்களில் தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குரு பகவான். மங்களநாயகனாக விளங்கக்கூடிய இவர் தன்னம்பிக்கை, செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். அதற்கு பிறகு இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். மிகப்பெரிய கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. மிகப்பெரிய மாற்றங்கள் உங்களுக்கு உருவாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்காலத்தில் நீங்கள் நினைக்காத அளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும். 

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். சொந்த வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். ராசிகள் அனைத்தும் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இருப்பினும் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். எதிர்பார்த்த வெற்றிகள் அனைத்தும் கிடைக்கும். 

நிறைய அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.

துலாம் ராசி

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு உண்மையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றி உண்டாக்கும். இதுவரை உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நட்சத்திர இடம் மாற்றும் உங்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல முன்னேற்றம் உங்களைத் தேடி வரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் வழக்கத்தை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9