தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Trigraha Yoga: திரிகிரக யோகம் வந்துவிட்டது.. பணத்தில் புகுந்து விளையாடும் ராசிகள்.. 3 ராசிகளுக்கு அடைமழை

Trigraha Yoga: திரிகிரக யோகம் வந்துவிட்டது.. பணத்தில் புகுந்து விளையாடும் ராசிகள்.. 3 ராசிகளுக்கு அடைமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 21, 2024 10:04 AM IST

Trigraha Yoga: மிதுன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் திரிகிரக யோகம் உருவாக்கியுள்ளது. ஜூன் 15ஆம் தேதி உருவான இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது.

திரிகிரக யோகம் வந்துவிட்டது.. பணத்தில் புகுந்து விளையாடும் ராசிகள்.. 3 ராசிகளுக்கு அடைமழை
திரிகிரக யோகம் வந்துவிட்டது.. பணத்தில் புகுந்து விளையாடும் ராசிகள்.. 3 ராசிகளுக்கு அடைமழை

அந்த வகையில் நவகிரகங்கள் அசைவுகளை பொறுத்து உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களின் செயல்பாடுகளும் தீர்மானிக்கப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசி திட்டங்களது இடத்தை மாற்றுகிறார்கள். இது போன்ற சமயங்களில் சுபம் மற்றும் அசுப பலன்கள் மற்றும் யோகங்கள் உருவாகும்.

அதன் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். சில கிரகங்களால் உருவாக்கப்படும். யோகங்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கின்றன. அந்த வகையில் மிதுன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் திரிகிரக யோகம் உருவாக்கியுள்ளது. ஜூன் 15ஆம் தேதி உருவான இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாக்கியது. இதனால் வணிகத்தில் உங்களுக்கு அற்புதமான படங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மேடைகள் அனைத்தும் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். விரும்பிய இடமாற்றம் சிலருக்கு கிடைக்கக்கூடும். சிக்கிக் கிடந்த பணம் உங்களது கைகளை வந்து சேரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல ஆதாயத்தை பெற்று தரும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் உங்களுக்கு ஈடுபாடு உண்டாகும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் வேலை செய்யும் இடத்தில் செயல் திறன் அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட காரியங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகி உள்ளது. இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில் ரீதியாக உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வணிகத்தில் நல்ல வாழ்க்கை உங்களுக்கு உருவாகும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9