தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  July Astrology: ஜூலை மாத பண பலன்கள்.. சுக்கிரன் பண விளையாட்டு.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்

July Astrology: ஜூலை மாத பண பலன்கள்.. சுக்கிரன் பண விளையாட்டு.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 22, 2024 10:51 AM IST

July Astrology: ஜூன் 30-ம் தேதி அன்று சுக்கிரன் மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜூலை மாத பண பலன்கள்.. சுக்கிரன் பண விளையாட்டு.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்
ஜூலை மாத பண பலன்கள்.. சுக்கிரன் பண விளையாட்டு.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்

சுக்கிரன் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அசுரர்களின் குருவாக திகழ்ந்துவரும் சுக்கிரன் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். 

இந்நிலையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று சுக்கிரன் மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மேல்படிப்பிற்காக மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். ஏற்கனவே செய்த முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். தொழிலை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு லாபத்தை இரட்டிப்பாக்கி தரும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திடீரென அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு இரட்டிப்பாக இருக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி வரவு இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். 

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திட்டமிட்ட காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு வெற்றிகரமாக நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9