தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Are Going To Be Troubled By Lord Mercury

Mercury Angry: புதன் வக்ரமானார்.. சிக்கி சிதைய போகும் ராசிகள்.. 3 ராசிகள் தப்பிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 27, 2024 01:50 PM IST

Mercury Angry: புதன் பகவானால் சிரமப்பட போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர் தான். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்திலும் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் மார்ச் 26 ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார்.

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி அன்று மேஷ ராசியில் வக்கிரமடைகிறார். புதன் பகவானின் வக்கிரதால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் வக்கிர நிலை அடைய உள்ளார் இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சொந்த வேலைகளில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து விஷயங்களிலும் சற்று பொறுமையாக இருப்பது நல்லது. எந்த செயலை செய்தாலும் மிகவும் ஆழமான சிந்தனைக்கு பிறகு செய்தால் நன்மை உண்டாகும். நிதி நிலைமையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் 12 வது வீட்டில் புதன் வக்கிரமடைகிறார். இதனால் உங்களுக்கு வேலைகளில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எந்த வேலையை தொடங்கினாலும் சற்று பொறுமையாக இருப்பது நல்லது. அதிகப்படியான சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். திடீரென பெரிய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு சிந்தனைகளுக்குப் பிறகு புதிய திட்டங்களை நிறைவேற்றுவது நல்லது.

கடக ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் வக்ரமடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான செல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உயர் அலுவலர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடின உழைப்பும் சில நேரங்களில் பலனளிக்காமல் போய்விடும். வியாபாரம் மற்றும் தொழிலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் சிக்கல்கள் ஏற்படாதீங்க வாய்ப்பு உள்ளது. வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய வாய்ப்பு உள்ளது. செலவுகளால் சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழலில் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel