Love Lucky: காதலில் குதூகலமாகும் ராசிகள்.. அறிவை அள்ளி கொட்டும் புதன்.. அம்சமாக அமரப் போவது யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Love Lucky: காதலில் குதூகலமாகும் ராசிகள்.. அறிவை அள்ளி கொட்டும் புதன்.. அம்சமாக அமரப் போவது யார்?

Love Lucky: காதலில் குதூகலமாகும் ராசிகள்.. அறிவை அள்ளி கொட்டும் புதன்.. அம்சமாக அமரப் போவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Aug 14, 2024 03:57 PM IST

Love Lucky: புதன் பகவான் கடந்த ஜூலை 19ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைந்தார் ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் வக்கிர நிலை அடைந்தார். தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும். புதன் பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகள் பணயோகத்தை பெறுகின்றனர்.

காதலில் குதூகலமாகும் ராசிகள்.. அறிவை அள்ளி கொட்டும் புதன்.. அம்சமாக அமரப் போவது யார்?
காதலில் குதூகலமாகும் ராசிகள்.. அறிவை அள்ளி கொட்டும் புதன்.. அம்சமாக அமரப் போவது யார்?

இது போன்ற போட்டோக்கள்

புதன் பகவானின் இடமாற்றம் சிறிய காலமாக இருந்தாலும் அதனுடைய தாக்கம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்நிலையில் புதன் பகவான் கடந்த ஜூலை 19ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைந்தார் ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் வக்கிர நிலை அடைந்தார். தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும். புதன் பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகள் பணயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் புதன் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். நல்ல யோகங்கள் உங்களுக்கு தேடி வரும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணம் தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் வக்ர நிலை அடைகிறார். இதனால் உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

நிதி நிலைமையில் வழக்கத்தைவிட சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவிற்கு உங்களுக்கு லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையோடு உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது இடத்தில் புதன் பகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் வேலை தொடர்பான முன்னேற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வெற்றியின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கைத் துணியில் சிறப்பான பயணம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு அதிக யோகம் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews