தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu: மங்காத்தா விளையாடப் போகும் ராகு.. பண மஞ்சத்தில் விழும் ராசிகள்.. கதவை திறந்தால் கொட்டும் பணம்

Lord Rahu: மங்காத்தா விளையாடப் போகும் ராகு.. பண மஞ்சத்தில் விழும் ராசிகள்.. கதவை திறந்தால் கொட்டும் பணம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 03, 2024 05:35 PM IST

Lord Rahu: ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இதனால் பணயோகத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மங்காத்தா விளையாடப் போகும் ராகு.. பண மஞ்சத்தில் விழும் ராசிகள்.. கதவை திறந்தால் கொட்டும் பணம்
மங்காத்தா விளையாடப் போகும் ராகு.. பண மஞ்சத்தில் விழும் ராசிகள்.. கதவை திறந்தால் கொட்டும் பணம்

Lord Rahu: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். ராகு மற்றும் தேதி இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். ராகு கேது இருவரும் வெவ்வேறு ராசியில் பயணம் செய்தாலும் எப்போதும் ஒரே செயலில் ஈடுபடக்கூடியவர்கள். ராகு பகவான் சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். அதனால் ராகு பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் ராகு பகவான் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இதனால் பணயோகத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

ரிஷப ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். தொல்லைகள் கொடுத்த அனைத்து வேலைகளும் உங்களை விட்டு நிவர்த்தி அடையும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்தில் புதிய ஆதாரத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. திருமணமானவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியில் இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் போகும்.

துலாம் ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு திடீர் பண வரவை கொடுக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் யோகம் உங்களை தேடி வர போகின்றது. வீட்டு கதவின் முன்பே பணம் கொட்டப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றி தேடித் தரும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிக ராசி

திடீர் பண வரவை ராகு பகவான் உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. எடுத்துக்கொண்ட காரியம் அனைத்தும் உங்களுக்கு விரைவாக நிவர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை செய்து கொடுப்பார்கள். 

சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் யோகம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9